கற்பிட்டி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் பலி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி கடற்பரப்பின் பத்தளங்குண்டு தீவுக்கு அருகாமையில் சுழியோடி மூலம் மின்பிடித் தொழில் செய்து வரும் இளைஞர் ஒருவர் கடலுக்குள் மீன்பிடி வலையில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது சுழியோடி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த இளைஞர் கடலில் காணப்பற்ற காற்றின் சீற்றம் காரணமாக மீன்பிடி வலையில் சிக்குண்டு கடற்பரப்பின் மேல் பகுதிக்கு வர முடியாது இவ் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவருடன் சென்றிருந்த ஏனைய மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் உடல் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதேச பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது எனவும் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
உயிரிழந்த இளைஞர் 21 வயது எனவும் கற்பிட்டி ஜனசவிபுர பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
No comments