Column Left

Vettri

Breaking News

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட மஹர சிறை பதற்ற நிலை!!




மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக் கூடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளது. சற்றுமுன்னர் தீயணைப்பு வாகனங்கள் மஹர சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வௌியேறியுள்ளன. எனினும் இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் அங்கு தொடர்ந்தும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Subscribe Us