Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருதில் இறைச்சிக் கடைகள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் சுகாதாரப் பரிசோதனை




(நூருல் ஹுதா உமர்) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஆட்டிறைச்சிக் கடைகள், இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் தெருவோர கடைகள், உணவகங்களில் இன்று (29) விசேட சுகாதாரப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பரிசோதனை நடவடிக்கையில் பொது சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்து கொண்டனர். இதன்போது, இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார நடைமுறைகள், உணவுப் பொருட்களின் பாதுகாப்பு, தூய்மை மற்றும் பணியாளர்களின் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக பரிசோதிக்கப்பட்டன. குறிப்பாக, உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மருத்துவப் பரிசோதனைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதும் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது. சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்ட நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு மற்றும் சுகாதாரமான சேவைகளை வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவு விற்பனை நிலையங்களில் சுகாதாரத் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Subscribe Us