Column Left

Vettri

Breaking News

மாரவில கட்டுநேரிய பகுதியில் விபத்து ஒருவர் பலி!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பாதசாரி ஒருவர் மீது வேகமாக வந்த லொறி மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சனிக்கிழமை (22) மாலை வேளையில், மாரவில - கட்டுனேரிய பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற போதே இடம்பெற்றுள்ளது லொறி மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய பாதசாரியை அங்கிருந்தவர்கள் உடனடியாக அவசர சிகிச்சைகளுக்காக மாரவில தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவரின் உடலம் உறவினர்களால் அடையாளம் காணப்படுவதற்காக தற்போது மாரவில தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய லொறியை உடனடியாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மாரவில பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு, அதன் சாரதியையும் கைது செய்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Subscribe Us