Column Left

Vettri

Breaking News

கலைமகளில் கலக்கிய மாணவர் பாராளுமன்ற அமர்வு!!




(வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு அதிபர் க.தியாகராஜா தலைமையில் நேற்று முன்தினம் ( 4) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது இலங்கை ஜனநாயக சோசலிசகுடியரசின் பாராளுமன்ற அமர்வு போன்று திட்டமிட்டு சபாநாயகர், பிரதமர் அமைச்சுக்கள் தெரிவுசெய்யப்பட்டு குழுவிவாதங்களும் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்வில் சம்மாந்துறை கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரோஸ்கான் ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் எம்.ஏ.அஸ்கர், ஆசிரியர் ஆலோசகர் எம் எச் கபீர் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். முன்னதாக அதிதிகள் வரவேற்கப்பட்டு முறைப்படி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கூட்டம் ஆரம்பமாகி வாதப் பிரதி வாதங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. அதிதிகள் பின்தங்கிய பிரதேசத்தில் இவ்வாறான சிறப்பு நிகழ்வை நடாத்த ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்கள் என வாழ்த்தி பேசினர்.

No comments