சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 43.5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!!
(மஜீட். ARM)
"எதிர்நீச்சல் போட முயற்சிக்கின்ற ஊக்கமுள்ள மக்களுக்குத் துணையாக..."
என்ற தேசிய சமூக வலுவூட்டல் மாதக் கருத்திட்டத்திற்கமைவாக (ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15), சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 43.5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் இன்று (13) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் S. L. M. ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், கரையோர பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களைக் கையளித்தார்.
மேலும், இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினரும், க்ளீன் சிறிலங்கா ஜனாதிபதி செயலக சம்மாந்துறை பிரதேச இணைப்பாளருமான Y. P. நபாஸ் (JP) கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டதுடன், உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலக கணக்காளர், பிரஜாசக்தி தவிசாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
No comments