Column Left

Vettri

Breaking News

பாகிஸ்தானில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி!!




பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘பாகிஸ்தான் வைத்திய அறிவியல் கழக’ (PIMS) வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளனர் ஏர் கண்டிஷனர் (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த போது அந்தப் பிரிவில் 16 குழந்தைகள் இருந்த நிலையில், ஒரு குழந்தை மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகள் நிறைவடைந்து, தற்போது புகையைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Subscribe Us