Column Left

Vettri

Breaking News

வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை!!




வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து, நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (20) உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார். வரி செலுத்தத் தவறியுள்ள மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து குறித்த வரிகளை அறவிடுவதற்கான உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரலினால் உயர்நீதிமன்றத்திற்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

No comments

Subscribe Us