Column Left

Vettri

Breaking News

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை உடனடியாக மீளப் பெற வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்தல்!!




வலி வடக்கில் மக்களுடைய காணிகளை உள்ளடக்கி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெற வேண்டும். பல போராட்டங்களுக்கு மத்தியில் மாகாண சபைகளுக்கு உரித்தாக்கிய அதிகாரங்களை மத்திய அரசுக்கு தற்போது விட்டுக்கொடுக்க முனைய கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் எ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானம் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, வலி வடக்கில் இராணுவ வைத்தியசாலை மீள கட்டப்பட்டு வருகிறது அது தொடர்பில் அவதானத்தைச் செலுத்தினோம். ஏற்கனவே வலி- வடக்கு காணிகள் தொடர்பான வழக்கில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ள காணியும் உள்ளடங்குகின்றது. இந்தக் காணி விவகாரத்தில் ஏற்கனவே அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறித்த வைத்தியசாலை காணியும் உள்ளடங்குகின்ற நிலையில் இராணுவம் தாம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணியிலேயே வைத்தியசாலை கட்டுவதாக தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையை கட்டுவதற்கு உள்ளூராட்சி மன்றத்தின் கட்டட அனுமதி பெறப்பட வேண்டும் அவ்வாறு பெறப்படாத கட்டிடங்களை அகற்கு பிரதேச சபைக்கு அதிகாரம் இருக்கிறது. இவ்வாறான ஒரு நிலையில் அரசாங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை திரும்ப பெற வேண்டுமென நாம் கோரிக்கை முன்வைக்கின்றோம். மேலும் கொழும்பில் ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் ஒரே நிலைப்பாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். அந்தக் கலந்துரையாடலில் மாகாண சபை தேர்தலை வலியுறுத்துவது, அதி உச்ச அதிகார பர்வுடனான புதிய அரசியல் அமைப்பு மற்றும் கணி உரிமம் தொடர்பாக முதலிலே ஓரணியில் செயற்படுவதாக இணக்கம் காணப்பட்டிருக்கிறது.இலங்கை சனத் தொகையில் ஏறத்தாழ 25 சதவீதமாக காணப்படுகின்றவர்கள் ஒன்றாக இணைந்து ஒரு செயற்பாட்டை வலியுறுத்தும் போது அது பல மானதாக இருக்கும் என்பதே எமது நோக்கம். மேலும் மாகாண அதிகாரங்கள் மத்தியைக்கு வழங்குவது தொடர்பிலும் பேசி இருந்தோம். ஆகவே பல போராட்டங்களுக்கு மத்தியில் பெறப்பட்ட மாகாண பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை நாங்களே மத்திக்கு கொடுப்பதற்கு முனைய கூடாது அதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

No comments

Subscribe Us