Column Left

Vettri

Breaking News

வரலாற்றில் முதல் தடவையாக தனிநபர் ஒற்றையர் பெட்மின்டன் போட்டியில் கல்முனை ஸாஹிறா மாணவன் எம்.எல்.ஏ. அன்ஸாப் மாகாணத்தில் சம்பியன் பட்டத்தை பெற்று தேசிய மட்டத்திக்கு தெரிவு!!




(எம்.எஸ்.எம்.ஸாகிர்) திருகோணமலை Mc Heyzer உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான (Eastern Province School Badminton Tournament) போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவன் எம்.எல்.ஏ. அன்ஸாப் தனிநபர் ஒற்றையர் போட்டியில் மிக சிறப்பாக விளையாடி சம்பியன் பட்டத்தைப் பெற்று, தனக்கான அடையாளத்தை கிழக்கு மாகாணத்தில் தனது பெயரை உச்சரிக்க வைத்து தனது பாடசாலைக்கு பெருமையைத் தேடித்தந்ததுடன் தேசிய மட்ட ஒற்றையர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவனை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஏ.எம்.அப்ராஜ் றிழா , எம்.எச்.எம். முஸ்தன்ஸிர் ஆகியோரை கல்லூரியின் முதல்வர் எம்.ஐ. ஜாபீ்ர் (SLEAS) இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் எஸ். முபாரக், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC) மற்றும் பழைய மாணவர்கள் (OBA), பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

No comments

Subscribe Us