பழுகாமம் நிருபர்.....பொதுச் சுகாதார பரிசோதகர் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக ஆட்டிறைச்சி கடை உரிமையாளருக்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை
பொதுச் சுகாதார பரிசோதகர் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை ஆட்டிறைச்சி கடை உரிமையாளருக்கு ஐந்து வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனை யும் 1500/= ரூபாய் தண்டாப்பணமும் எச்சரிக்கையும் வழங்கி களுவாஞ்சிக்குடி நீதி மன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
களுவாஞ்சிக்குடி பொதுச்சுகாத பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தையில் அமையப் பெற்ற ஆட்டிறைச்சி கடையில் பரிசோதனைக்காக சென்றவேளை சுகாதார பரிசோதகரது கடமையை செய்யவிடாது அவரது கடை மைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடை உரிமையாளர் நடந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து. குறித்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிசில் குறித்த கடை உரிமையாளருக்கருக்கு எதிராக முறைப்பாடொன்றினை சுகாதார பரிசோதகர் மேற் கொண்டிருந்தார். இதன் பிரகாரம் உரிமையாளருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி பொலிசாரால் வழக்கு தொடரப்பட்டிருந்து.
குறித்த வழக்கானது இன்று 06.07.2026 அன்று திங்கட் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கினை விசாரித்தறிந்த நீதிவான் கடை உரிமையாளருக்கு எதிராக குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.....பழுகாமம் நிருபர்.
No comments