Column Left

Vettri

Breaking News

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, 2026 ஜூலை 6 முதல் 10 வரை காலப்பகுதி 11வது தேசிய காயம் தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள!!




சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, 2026 ஜூலை 6 முதல் 10 வரை காலப்பகுதி 11வது தேசிய காயம் தடுப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இதன் முதல் நாளான ஜூலை 6, சாலைப் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் திரு.சி.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஏனைய பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பொதுமக்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுத்தனர். இந்நிகழ்வின் போது, சாலை விதிகளைப் பின்பற்றுதல், தலைக்கவசம் மற்றும் பாதுகாப்புப் பட்டி அணிவதன் அவசியம், பாதுகாப்பான வாகன ஓட்டம் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. காயங்களையும் விபத்துகளையும் குறைத்து, பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது....பழுகாமம் நிருபர்

No comments

Subscribe Us