Column Left

Vettri

Breaking News

சந்நிதியான் ஆச்சிரமம் கதிர்காம பாத யாத்திரீகர்களுக்கு தொடர்ச்சியான உதவிகள்!!




( வி.ரி.சகாதேவராஜா) யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரிய கதிர்காம பாத யாத்திரையினர் 37 நாட்களை கடந்த நிலையில், ஒன்பதாவது தடவையாக, அம்பாறை மாவட்டத்தில் தம்பட்டை ஆலையடி விநாயகர் ஆலயத்திற்கு வந்து உதவி செய்தனர். பாதயாத்திரீகர்கள் அனைவருக்கும் ஒரு தொகை கைச் செலவு நிதி வழங்கப்பட்டது. ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் நேற்று 30/06/2026 ந்திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.40 மணியளவில் ஆலயத்தில் வைத்து உதவியை வழங்கினார். யாழ்ப்பாணத்திலிருந்து ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாக வந்து வழங்கி வைத்தார். இவ்வாறு இவர் வருடாவருடம் உகந்தமலை முருகன் ஆலயம் வரை சென்று உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments