Column Left

Vettri

Breaking News

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்!!




பாறுக் ஷிஹான் சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின் புதிய தவிசாளராக, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார். அரச சார்பற்ற சர்வதேச அமைப்பான 'சீன – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின்' மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போதே இவருக்கான புதிய தவிசாளர் நியமனம் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், சம்மாந்துறை தேர்தல் தொகுதியூடாக தீவிர அரசியலில் பிரவேசித்து நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். அரசியல் பணிகளுக்குப் பின்னரும், தனது கல்விப் புலமைப்பின்னணியைக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த சர்வதேசப் பதவியை அவர் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us