Column Left

Vettri

Breaking News

கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!




கைத்துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) இரவு சந்தேகநபர் மகரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத வீதிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மகரகம, புகையிரத வீதிப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவராவார். இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments

Subscribe Us