Column Left

Vettri

Breaking News

கதிர்காம யாத்திரியர்களுக்கான மருத்துவ முகாம்!!




அபு அலா கதிர்காம யாத்திரியர்களுக்காக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் முற்றிலும் இலவசமான மருத்துவ முகாமினை இவ்வருடமும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார். இந்த மருத்துவ முகாமினை குமண சரணாலயத்தில் இரு இடங்களில், கிணத்தடி மற்றும் வங்குறாவெளியில் இன்று 10 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த இலவச மருத்துவ முகாமில், உபாதைகளிற்கான ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை, வலி, சோர்வு, தசை பிடிப்பு, முட்டு வலி, தடிப்பு போன்றவற்றிற்கான சிகிச்சையுடன் ஆயுர்வேத மருந்துகள் வழங்குதல் மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனைகள் மற்றும் அவசர நிலைகளிற்கான முதலுதவி சேவைகள் போன்ற சேவைகளை வழங்கி வைக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். "யாத்திரியர்களின் ஆரோக்கியமே எங்கள் நோக்கு" எனும் கருப்பொருளை முன்னிறுத்தி கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்த இலவச மருத்துவ சேவைகளை தொடர்ந்து 10 வது வருடமாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us