Column Left

Vettri

Breaking News

கதிர்காம கானக பாதயாத்திரையில் 25 வருட வெள்ளிவிழாக்கண்ட பொதுச்சுகாதார பரிசோதகர் புனித ராஜன்!!




( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் லாகுகல பிரதேச சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புனிதராஜன் கடந்த 25 வருட காலமாக வழமையான சேவையுடன் கதிர்காம கானக பாதயாத்திரை சுகாதார சேவையில் வெள்ளிவிழாக்கண்ட ஒரு சேவையாளனாக பணியாற்றி வருகிறார். மொத்தமாக 27 வருட கால சேவையில் லாகுகல பிரதேசத்தில் 25 வருடகாலம் பொதுச் சுகாதார பரிசோதகராக பணியாற்றும் அவர் இந்த கதிர்காம பாதயாத்திரிகர்களது சுகாதார விடயங்களில் கூடுதல் அக்கறை செலுத்தி சிறப்பாக சேவைகளை நிறைவேற்றும் அதிகாரியாக செயல்பட்டு வருகின்றார் . அவரது தன்னலமற்ற சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments

Subscribe Us