Column Left

Vettri

Breaking News

லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் 2026 மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா !




மாளிகைக்காடு செய்தியாளர் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா திங்கட்கிழமை (13) காலை பாடசாலை வளாகத்தில் ஒழுக்காற்று சபை தலைவர் எம்.எப்.எம். றிபாஸ் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் மற்றும் NICU பிரிவின் மருத்துவ அதிகாரி டாக்டர் ஏ.எம். மிஸ்பாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு புதிய மாணவர் தலைவர்களுக்கு பதவிச் சின்னங்களை அணிவித்து, உறுதிமொழி வழங்கி பதவியேற்றினார். கௌரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மாலீக் கலந்து கொண்டதுடன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் நூருல் ஹுதா உமர் விசேட அதிதியாக பங்கேற்றார். இதன்போது மாணவர் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம், ஒழுக்கம், பொறுப்புணர்வு, சேவை மனப்பான்மை மற்றும் முன்னுதாரணமான நடத்தையின் அவசியம் குறித்து அதிதிகள் கருத்துரைகளை வழங்கினர். புதிய மாணவர் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக பதவிப் பொறுப்புகள் வழங்கப்பட்டதுடன், தலைமைத்துவப் பொறுப்புகளை நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதன்போது ஆங்கில மொழித்தின போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us