கிணற்றடியில் திணறும் கானகபாதயாத்திரீகர்கள்! கடந்த மூன்று தினங்களில் 12 ஆயிரம் பேர் பயணம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
கதிர்காம கானக பாதயாத்திரையின் முதல் தரிப்பிடமான வாகுரவெட்டை அல்லதுவண்ணாத்திர கிணற்றடியில் தினம் தினம் கூடும் யாத்திரீகர்களின் கூட்டத்தால்அப்பகுதி திணறுகிறது.
முதல் நாளில் (10 வெள்ளிக்கிழமை) 16 ஆயிரம் அடியார்கள் காட்டுக்குள் பயணித்த அதேவேளை கடந்த மூன்று தினங்களில்(11,13'14)
சுமார் 12 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர்.
அப் பகுதி கனகாம்பர கம்பளம் விரித்தது போன்று காணப்படுகிறது.
இரவானால் ஒருவித காட்சி.
குடிநீர் தட்டுப்பாடு போதிய இடவசதி அசௌகரியங்களுக்கு மத்தியிலும் ஒருவகை மகிழ்ச்சி திருப்தி நிலவு.
No comments