Column Left

Vettri

Breaking News

ஆளுநரால் பெரியநீலாவணையில் கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் திறந்துவைப்பு! தமிழர் கலாசார அபிவிருத்தி மன்றம் பொறுப்பு 




 ஆளுநரால் பெரியநீலாவணையில் கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் திறந்துவைப்பு!

தமிழர் கலாசார அபிவிருத்தி மன்றம் பொறுப்பு 
( வி.ரி. சகாதேவராஜா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெரியநீலாவணையில் 1 கோடி 10 லட்சம் ரூபாய் செலவில்புனரமைக்கப்பட்டுள்ள உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று (19) வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் திருமதி மேனகா புவிகுமார்  தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு , முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர். பேராசிரியர் கலாநிதி. ஜயந்த லால் ரத்னசேகர கலந்து சிறப்பித்தார்.

கௌரவ விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஆதம்பாவா சிறப்பு விருந்தினராக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ்  கலந்து சிறப்பித்தனர்.

முன்னாள் கிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளர் ச.நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கலாச்சார மையத்தை தொடரந்து நிருவாகம் செய்வதற்கான பொறுப்பு பெரியநீலாவணை தமிழர் கலாசார அபிவிருத்தி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதற்கான சான்றிதழை ஆளுநர் தமிழர் கலாசார அபிவிருத்தி மன்றச் செயலாளர் என்.சௌவியதாசனிடம் வழங்கி வைத்தார்.

No comments

Subscribe Us