Column Left

Vettri

Breaking News

கல்முனையில் அபார் எனும் கவிஞனை நினைவு கூரும் சிறப்பு நிகழ்வு!!




எம்.எஸ்.எம்.ஸாகிர்) எமக்காக வாழ்ந்து மறைந்தவர்களை என்றும் நினைவுகூரும் 'நினைவுகளே நமது இருப்பு' எனும் தொனிப்பொருளில் அமைந்த அபார் எனும் கவிஞனை நினைவு கூரும் சிறப்பு நிகழ்வு நாளை (28) ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கல்முனை அஷ்- ஷுஹறா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது. கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வில், கவிஞர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள், ஊர்நலன்விரும்பிகள், கவிஞர் அபாரின் குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வில் விரும்பியவர் யாரும் கொள்ளலாம் என திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தொடர்புகளுக்கு அழைக்கவும் 0777243502 அல்லது 0772858095 அல்லது 0773138109 அல்லது 0777578526

No comments

Subscribe Us