Column Left

Vettri

Breaking News

கல்முனையில் சுப்பிரமணியனை உதைத்த நபர் கைது!!




வி.ரி.சகாதேவராஜா இன்று(27) சனிக்கிழமை மாலை கல்முனைக்குடி பிரதான வீதியில் கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வந்த சுப்பிரமணியன் எனும் வாயில்லா ஜீவனை( நாயை) உதைத்த நபர் கல்முனை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாயில்லா ஜீவனை எட்டி உதைத்த நபர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் குவிந்த கண்டனங்களையடுத்து இந்த கைது இடம்பெற்றிருப்பதாக அறிய வருகிறது. விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற மனிதநேயம் மறைந்து வரும் நிலையில், கதிர்காம பாதயாத்திரையாக வரும் ''சுப்ரமணி நாய்க்கு ''அஷ்ரப் வைத்தியசாலைக்கு ( மடுவத்தை) அருகில் பழக்கடை வைத்திருக்கும் சகோதர இனத்தவர் ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதல், மிக கேவலமான ஒரு கீழ்த்தரமான செயற்பாடு கண்டிக்கத்தக்கது என சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வைரலாகின. அதனையடுத்து கல்முனை பொலிசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த துரித நடவடிக்கையையிட்டு பொலீஸ் திணைக்களத்திற்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். இதேவேளை, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் அஸாருடன் தொடர்புகொண்ட பொழுது அவர் மக்காவில் இருப்பதாகவும் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தந்த நாராயண பதில் கடமை புரிவதாகவும் எமது நிருபரிடம் தெரிவித்தார். அதனையடுத்து அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us