Column Left

Vettri

Breaking News

சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக தௌபீக் பதவியுயர்வு.




 சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக தௌபீக் பதவியுயர்வு.

( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 
 "சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக".(MN - 7 . SUPRA GRADE) 2023.01.01 முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கான பதவியுயர்வு நியமனக் கடிதம் கடந்த 2026.06.01 ம் திகதி திங்கட்கிழமை              கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து  கிழக்கு மாகாண ஆளுநர். பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் வழங்கி வைக்கப்பட்டது.

 ஆளுநரின் செயலாளர் பி. வாகீசன் ,கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கே.குணநாதன்  மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப்  பணிப்பாளர் திருமதி.மேனகா புவிக்குமார் ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.

இப்பதவியுயர்வானது கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றும் சுமார் 45 கலாசார உத்தியோகத்தர்களில் விண்ணப்பிக்க தகுதியான  கலாசார உத்தியோகத்தர்கள் தரம் I ஐ  சேர்ந்தவர்கள் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுவினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு அமைய விண்ணப்பித்து அதற்கமைவாக 
 நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சை மூலம் மாகாணத்தில் இரண்டு பேர்கள் மாத்திரமே நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதில் ஒருவர் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஏஎல்.தௌபீக் .
மற்றயவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி..நிமல்சிறி பண்டார என்பது குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியான இவர் அரச சேவையில் நிகழ்ச்சித்திட்ட உதவியாளராக, ஆசிரியராக மற்றும் அதிபராக எட்டு வருடங்கள் சேவையாற்றிய நிலையில் போட்டிப் பரீட்சை மூலம் கலாசார உத்தியோகத்தராக நியமனம்  பெற்று 2000 ம் ஆண்டு முதல் அம்பாரை மாவட்டத்தின் இறக்காமம், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களில் கடமையாற்றிய நிலையில் 2009 இல் இருந்து அம்பாரை  மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தராக நியமனம் பெற்று அம்பாரை மாவட்ட செயலகம் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அம்பாரை மாவட்ட காரியாலயங்களில் 17  வருடங்கள் மாவட்ட மட்ட  கலாசார வேலைத்திட்டங்களை 
எல்லோரது மனங்களையும் கவரும் வண்ணம் 
 இன மத வேறுபாடின்றி மேற்கொண்டு வந்த நிலையில் அவருக்கான இப்பதவியுயர்வு கிடைத்திருப்பது மாகாண மற்றும் மாவட்ட மூவின கலைஞர்களது மனங்களிலும் மட்டில்லா மகிழ்வை  தருகின்றது என பலரும் குறிப்பிடுகிறார்கள்.

No comments