Column Left

Vettri

Breaking News

வேலோடுமலையில் ஐந்து பாணலிங்கங்கள் பிரதிஷ்டை




 


 வேலோடுமலையில் ஐந்து பாணலிங்கங்கள் பிரதிஷ்டை 
(வி.ரி.சகாதேவராஜா)
 உலகப் புகழ்பெற்ற காசி மாநகரிலிருந்து பக்திப்பூர்வமாகக் கொண்டுவரப்பட்ட, மிகவும் புனிதமான ஐந்து பாணலிங்கங்கள் வேலோடுமலை முருகன் ஸ்தலத்திலே புனிதமான வைகாசி விசாக நன்னாளினில், முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அடியார்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்த ஆன்மீக வைபவம், வேலோடுமலைத் தலத்தில் ஆதீன கர்த்தா தியாகராஜ சுவாமிகள் தலைமையில் மிகக் கோலாகலமாகவும் பக்திப் பரவசத்துடனும் அரங்கேறியுள்ளது.

 வைகாசி விசாக நன்நாளில் சுக்ர ஹோரையில் வேலோடு மலை முருகன் ஆலயத்தில் அகத்தியர் பெருமானின் ஆணைப்பாடி ஜீவ நாடியில் உரைக்கப்பட்ட பஞ்ச சுயம்பு லிங்கங்களும் காசியில் இருந்து ஜானகிராமன் மற்றும் கார்த்திக் சுவாமிகளால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்டு திருவண்ணாமலையில் 10 நாட்கள் பூஜிக்கப்பட்டு சுப முகூர்த்தத்தில் கோபிநாத் சுவாமிகள் மற்றும் சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 இன்றோடு பஞ்ச பூத தலங்களில் ஆற்றலை வேலோடு மலைக்கு அகத்தியர் பெருமான் தருகிறார் என சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ தெரிவித்தார்.

 இந்த ஐந்து பாண லிங்கங்களின் ஆற்றல்  உடலில் படும் போது மிக பெரிய ஆற்றலை  தரும் என்று நம்பப்படுகிறது.

No comments

Subscribe Us