Column Left

Vettri

Breaking News

யானை தாக்கியதில் பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு!!




இறக்குவானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையில் நடைபெற்ற 7ஆவது பொசன் பெரஹரா ஊர்வலத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானை தாக்கியதில், பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.

நேற்று (21) நடைபெற்ற ஊர்வலத்திற்காக அழைத்து செல்லப்பட்ட 2 யானைகள் விகாரைக்கு அருகில் கட்டப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அந்த யானைகளில் ஒன்றிற்குத் தண்ணீர் கொடுப்பதற்காகப் பாகனின் உதவியாளர் இறக்குவானை ஆற்றை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் யானை ஆவேசமடைந்து உதவியாளரைத் தாக்கி, மிதித்துக் கொன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உதவியாளரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்குச் சென்ற யானைப் பாகனையும் அந்த யானை தாக்கியுள்ளதுடன், அவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்திற்குப் பிறகு யானை விகாரைக்கு அருகிலுள்ள வயல்வெளி ஒன்றிற்குள் ஓடியுள்ளது.

வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளதோடு, யானைக்கு மயக்க மருந்து செலுத்தி அதைப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments