Column Left

Vettri

Breaking News

திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தில் நாளை எண்ணெய்க் காப்பு மகா கும்பாபிஷேகம்!!





வி.ரி.சகாதேவராஜா

மட்டக்களப்பு  திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 26 ஆம் திகதி அதிகாலையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

அதற்கான எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நாளை 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் மற்றும் 25 ஆம் திகதி மாலை 4.00 மணி வரை இடம்பெறுகிறது.

முன்னதாக கிராமசாந்தி வாஸ்து சாந்தி கர்மராம்பம்  கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஆலயத்தின் பிரதான நிகழ்வான மகா கும்பாபிஷேகம், பிரதிஸ்டா பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்திக் குருக்கள் தலைமையில்  ஜூன் 26 ஆம் திகதி அதிகாலை பக்தி பூர்வமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு சமய நிகழ்வுகள், பூஜைகள் மற்றும் விசேட வழிபாடுகளும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 19.07.2026 இல் மகா சங்காபிஷேகம் இடம்பெறும்.

No comments

Subscribe Us