Column Left

Vettri

Breaking News

கல்லடியில் தீமிதிப்பு விழா




 இன்று கல்லடியில் தீமிதிப்பு விழா

(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு, கல்லடி ஸ்ரீ வேலாயுதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவத் திருவிழாவின் இறுதி நாளான  இன்று (31.05.2026) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அடியவர்களின் "அரோகரா" கோசங்களுக்கு மத்தியில் தீமிதிப்பு நிகழ்வு மிக விமரிசையாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது.

கடந்த 23.05.2026 சனிக்கிழமை அன்று 'வாஸ்து சாந்தி'யுடன் ஆரம்பமான இந்த வருடாந்த அலங்கார மகோற்சவத் திருவிழா, தொடர்ந்து 9 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்தது.

விழாவின் இறுதி நாளான இன்று அதிகாலை, கல்லடி பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட தீமிதிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதற்கு முன்னதாக, முருகப்பெருமான் அழகிய சப்புறத்தில் எழுந்தருளி, வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து, கடுமையான விரதங்களை அனுஷ்டித்த பக்தர்கள் செந்தழல் மீது பக்திப் பரவசத்துடன் நடந்து சென்று தமது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

தீமிதிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, சமுத்திர நீராடல் (தீர்த்தோற்சவம்) முடிவுற்றதும்   ஆலயத்தில்   பொன்னூஞ்சல் ஆகிய சிறப்பு வழிபாடுகள் இடம்   பெற்று விழாவின் நிறைவாக, ஆலயத்திற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது .

No comments