Column Left

Vettri

Breaking News

உணவக கொள்ளை வழக்கு: இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடுங்காவல்!!




தெஹிவளை பகுதியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில், இரு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கும் நபரொருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. நீண்ட விசாரணைகளுக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இத்தீர்ப்பை வழங்கியுள்ளார். 2008 ஆம் ஆண்டு தெஹிவளையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து, பணத்தைக் கொள்ளையடித்ததாக இவர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகக் கொள்ளை உட்படப் பல குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நபரொருவருக்கு 5 ஆண்டுகளும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு தலா 03 ஆண்டுகளும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணைகளின் முடிவில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் இத்தண்டனையை உறுதி செய்துள்ளது.

No comments

Subscribe Us