Column Left

Vettri

Breaking News

வாகுறவெட்டையில் சிரமதானம் மற்றும் கிணறுகள் சுத்திகரிப்பு




 வாகுறவெட்டையில் சிரமதானம்; கிணறுகள் சுத்திகரிப்பு 

(வி.ரி.சகாதேவராஜா)

 2026ம் ஆண்டு கதிர்காமபாதயாத்திரையை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி தம்பிலுவில் சைவநெறிக்கூட உறுப்பினர்கள் வாகுறவெட்டையில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.

உகந்தை கதிர்காமம் காட்டுப் பாதையில் முதலாவது தங்குமிடம் வாகூரவெட்டை அல்லது கிணற்றடி அல்லது வண்ணாத்திரகிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற பக்தர்கள் இங்கு அன்றிரவு தங்கியிருந்து மறுநாள் அதிகாலை பூமி பூஜை செய்து குமுக்கன் நோக்கி புறப்படுவது வழமை.

பக்தர்களின் பாவனைக்காக, ஏலவே சேதமடைந்திருந்த கிணறுகளை சீரமைப்பு செய்து கிணற்று நீரை சுத்திகரித்து பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஏற்பாடு செய்தனர்.

No comments

Subscribe Us