Column Left

Vettri

Breaking News

காரைதீவில் யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு மகத்தான வரவேற்பு! சுப்பிரமணியைக்காண பலர் முண்டியடிப்பு!!




வி.ரி.சகாதேவராஜா காரைதீவில் யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு நேற்று (27) சனிக்கிழமை மாலை மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அவர்களுடன் பயணிக்கும் சுப்பிரமணியைக்காண பலர் முண்டியடித்தனர். அடியார்கள் அனைவரும் காரைதீவினை வந்தடைந்ததும் முதன்முதலாக முருகபத்தரான சண்முகம் தேவதாஸ் குடும்பத்தினர் வழமைபோல வரவேற்று உபசரித்தனர். ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அத்தோடு யாத்திரையில் வழமைக்கு மாறாக இம்முறை சுப்பிரமணியம் எனும்(நாய்)ஐந்தறிவு படைத்த ஜீவனும், கல்முனைக்குடி சம்பவத்திற்கு பிறகு வருகைதந்தது. இந்த சுப்பிரமணியத்தை பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகைதந்து பார்வையிட்டு சென்றனர். அதனைதொடர்ந்து அடியார்கள் நேற்று இரவு காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் தங்கினர் . இன்று காலை சித்தர் சித்தானைக்குட்டி ஆலயத்திற்கு சென்று மதியம் நந்தன சித்திவிநாயகர் ஆலயத்திலும் அங்கிருந்து சென்று இரவு கந்தசுவாமி ஆலயத்தையடைந்தனர்.

No comments

Subscribe Us