Column Left

Vettri

Breaking News

காரைதீவில் மின்னும் இராமகிருஷ்ணா விளையாட்டு கழகம்! மாவட்ட மட்ட கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பிடித்து தேசிய நிலைக்குத் தகுதி.




 காரைதீவில் மின்னும் இராமகிருஷ்ணா விளையாட்டு கழகம்! மாவட்ட மட்ட  கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் முதலிடம் பிடித்து தேசிய நிலைக்குத் தகுதி.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கல்முனை கடற்கரையில் நடைபெற்ற மாவட்ட மட்ட கடற்கரை கரப்பந்தாட்டபோட்டியில், அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திப் பத்து அணிகள் பங்கேற்று விளையாடின. இந்த கடுமையான போட்டியில், இராமகிருஷ்ணா விளையாட்டு கழக வீரர்கள் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம், அந்த அணி தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

மேலும், இந்த தேசிய போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் ஆறாம் மற்றும் ஏழாம் திகதிகளில், நீர்கொழும்பு நகரில் உள்ள பீச் பார்க் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.


No comments

Subscribe Us