Column Left

Vettri

Breaking News

கல்முனையில் வீதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி !




அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கல்முனை – பாண்டிருப்பு பிரதான வீதியில் இன்று (02) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பொலிஸார் தெரிவிப்பதாவது, மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிறிய பட்டா (Batta) ரக வாகனம், கல்முனை தாழவட்டுவான் சந்திக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் மோதியுள்ளது. 

விபத்தின் தாக்கத்தால் லொத்தர் விற்பனை நிலையம் கடுமையாக சேதமடைந்ததுடன், அங்கிருந்த தூண்கள் மற்றும் மின்விளக்குகளும் சேதமடைந்துள்ளன. 

வாகன சாரதிக்கு திடீரென உடல்நலக் குறைவு, குறிப்பாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்தனர். 
விபத்தில் காயமடைந்த வாகன சாரதியும், லொத்தர் விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவரும் அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும், சிகிச்சை பலனின்றி வாகன சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments

Subscribe Us