2027 முதல் பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான புதிய சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை அனுமதி!!
2027 முதல் பாடசாலைகளில் தரம் 1 மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான புதிய சுற்றுநிருபத்தை வெளியிட அமைச்சரவை அனுமதி.
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்தல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் சுற்றுநிருபங்கள் ஆலோசனைகள் வெளியிடப்படுவதுடன், கல்விக்கான சமமான அணுகல் வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன், முறைகேடுகளைக் குறைக்கும் வகையில் செயலாற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை வகுப்பதே அதன் நோக்கமாகவுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அதிபர்மார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் கருத்தில் கொண்டு, மற்றும் புதிய கல்வி மறுசீரமைப்பின் மீதும் கவனத்தைச் செலுத்தி புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2027 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்துவரும் காலங்களில் அரச பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கிய புதிய சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல் அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments