மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் உயர்தரம் கற்க 10 மலையக மாணவர்களுக்கு உதவிகள் !!
இம்முறை வெளியான சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மலையக மாணவர்களில் 10 பேருக்கு மட்டக்களப்பில் உள்ள சிவானந்தா கல்லூரியின் விடுதியில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்து தான் விரும்பிய கற்க நெறியை படிப்பதற்கு சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தங்கும் இடத்திற்கான கொடுப்பனவு, மேலதிக வகுப்புக்கான கட்டணம் என்பவற்றை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் யாவும், லண்டனில் வசிக்கும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களும், சிவானந்தா பாடசாலையும் இணைந்து செயற்படுத்துகின்றனர். இவ்வாறு தங்கி இருந்து படிக்க விரும்பும் மலையக மாணவர்களில் ஆண் பிள்ளைகள் மாத்திரம் இந்த வாய்ப்புக்காக விண்ணப்பிக்க முடியும். இதுதொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். கலாநிதி நவரத்தின ராஜா( 0777346679), பேராசிரியர் ஏ எஸ் சந்திரபோஸ் (0716643669) ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க முடியும்.
No comments