Column Left

Vettri

Breaking News

ஊர்சுற்றுக்காவியம் பாடும் இரவுநேர சடங்கை காண ஆயிரம் பக்தர்கள் 




 ஊர்சுற்றுக்காவியம் பாடும் இரவுநேர சடங்கை காண ஆயிரம் பக்தர்கள் 

( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்ச்சி திருச்சடங்கின்
முதலாம் நாள்  ஊர்சுற்றுக்காவியம் பாடும் நிகழ்வு நேற்று  (26) செவ்வாய் இரவு பக்தி பூர்வமாக நடைபெற்றது.

உடுகு அடித்து குறித்த இசையோடு பாடும் இப் பாடலை செவிமடுக்க சுமார் ஆயிரம் பக்தர்கள் இரவில் ஒன்று கூடுவது வழக்கம். முதல் நாளில் வண்ணக்கர் இரா.குணசிங்கம் மற்றும் முன்னாள் கப்புகன் அ.சிறிதரன் ஆகியோர் சுவைபட  பாடினார்கள்.

தொடர்ந்து ஏழு நாட்கள் சடங்கு நடைபெற்று ஜூன் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையும். 

சடங்குகள் அனைத்தும் ஆலய கப்புகனார்  தலைமையில் நடைபெறும். சடங்குநாட்களில் ஊர்சுற்றுக்காவியம் பாடுதலுடன் பச்சைகட்டல் நிகழ்வும் இடம்பெறும்.

ஜூன் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் பி.ப.3மணிக்கு பொங்கலுக்கு நெற்குத்தும் வைபவமும் நடைபெறும். 

 அதேவேளை ஜூன் 08ஆம் திகதி எட்டாம் சடங்குப்பூஜை ஆயிரம் பொங்கல் பானைகளுடன் இடம்பெறும் .

No comments