Column Left

Vettri

Breaking News

உகந்தமலை கிணறுகளை "ஸ்பான்ட்" அமைப்பினர் சுத்திகரிப்பு 




 உகந்தமலை கிணறுகளை "ஸ்பான்ட்" அமைப்பினர் சுத்திகரிப்பு 

( வி.ரி.சகாதேவராஜா)
உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பல கிணறுகளை “ஸ்பான்ட்” ( Spand) அமைப்பினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரைவில் வரவிருக்கும் ஆண்டுத் திருவிழாவையும் கதிர்காமம் பாதயாத்திரையையும் முன்னிட்டு இந்த சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக பராமரிப்பின்றி மோசமான நிலையில் காணப்பட்ட ஆலய கிணறுகள் தற்போது சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் பயன்பெறும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கதிர்காமம் பாதயாத்திரை காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உகந்தமலைக்கு வருகை தரும் நிலையில், குடிநீர் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த கிணறுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

 இதனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தன்னலமற்ற சிரமதான பணிக்கும் வருடாந்தம் குடிநீர் விநியோகம் மேற்கொண்டு வருவதற்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்பான்ட் அமைப்பினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.



மேலும், ஆலய சூழல் தூய்மையாக பேணப்பட வேண்டும் என்பதற்காக ஆலயத்தில் கடல்மண் பரவினர். எதிர்காலத்திலும் இத்தகைய சமூகப்பணிகள் தொடர வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments