Column Left

Vettri

Breaking News

செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கிய 52 நாள் புனித பாதயாத்திரை மே 23இல் ஆரம்பம்!




செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கிய 52 நாள் புனித பாதயாத்திரை மே 23இல் ஆரம்பம்! ( வி. ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் இம் மாதம் 23 ஆம் திகதி தொடங்கவுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய கொடியேற்றம் யூலை 15 ஆம் திகதி நடைபெற்று, தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா இடம்பெற்று , யூலை 29 ஆம் திகதி தீர்த்தம் நடைபெறும் என்று பஞ்சாங்கம் கூறுகின்றது. இலங்கையின் மிக நீண்ட இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமி எனும் அடியாரை 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம். இதுவரை 95 பக்தர்கள் மாத்திரமே உறுதிப்படுத்தப்படுவர் என அவர் தெரிவித்தார். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் இந்தப் பாதயாத்திரை வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களினூடாக யாழ்ப்பாணம், ,கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை போன்ற 7 மாவட்டங்களைக் கடந்து செல்லவுள்ளது. சுமார் 52 நாட்கள், 572 கிலோமீற்றர் தூரத்தை கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றது. இம்முறை புனித கதிர்காமப் பாதயாத்திரைக்கான காட்டுப்பாதை திறக்கப்படும் திகதிகள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இம்முடிவானது கதிர்காமம் மற்றும் உகந்தையில் இடம்பெறும் இருகட்ட கலந்துரையாடலிலேயே உறுதிசெய்யப்படும். எவ்வாறாயினும் இம்முறை காட்டுப்பாதை 2026.07.06தொடக்கம் 2026.07.09 இந்த நாட்களுக்கிடையில் திறக்கப்படும் என்பது உறுதி.

No comments

Subscribe Us