Column Left

Vettri

Breaking News

கல்முனை மற்றும் மாளிகைக்காட்டில் 'கல்வேலி' பாதுகாப்பு செயற்றிட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு




கல்முனை மற்றும் மாளிகைக்காட்டில் 'கல்வேலி' பாதுகாப்பு செயற்றிட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியுடன் மாளிகைக்காடு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அபாயத்தைத் தடுக்கும் பொருட்டு, கல்வேலி (Revetment) அமைக்கும் பணிகள் இன்று (23) வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. இன்று நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதிமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் கலந்துகொண்டு இப் பணிகளை ஆரம்பித்து வைத்தனர். மக்களின் நீண்ட காலப் பிரச்சினையான கடல் அரிப்பு பிரச்சினைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள் இதற்கு முன்னரும் பல நடவடிக்கைகள் எடுத்து வெற்றி கண்ட போதிலும் எஞ்சியுள்ள சில பகுதிகளுக்கும் இன்று கல்வேலி இட்டு பாதுகாக்கும் பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments