Column Left

Vettri

Breaking News

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு...




நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு... பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச சபையின் ஐந்தாவது சபையின் ஏழாவது அமர்வு, தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் இன்று (23) நடைபெற்றது. சபை அமர்வின் போது, உப குழு நியமனங்களில் சிக்கல்கள் உள்ளதாகவும், உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டி, உப தவிசாளர் எம்.ஐ. இர்பான், உறுப்பினர்கள் எம்.ஏ.எம். றசீன் மற்றும் எம்.ஐ.எப். றிஹானா ஆகியோர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தவிசாளர் றியாஸ் ஆதம், “ இறுதியாக நடைபெற்ற சபையினுடைய தவிசாளர் தெரிவும் அதற்கு முந்தைய நிகழ்வுகளும் அனைவருக்கும் தெரிந்ததே. சில உறுப்பினர்கள் கட்சி அரசியலை சபைக்குள் கொண்டு வந்து குழப்பம் ஏற்படுத்த முயலுகின்றனர். எதிர்காலத்தில் அதனை தவிர்த்து மக்களுக்கான சேவைகளை முன்னிறுத்த வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார். மேலும், “நிந்தவூர் பிரதேச சபையில் கட்சி வேறுபாடுகளை தாண்டி அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படுவது எமது நோக்கம். சபை நடவடிக்கைகளை குழப்பி அசாதாரண சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பதை நாம் கண்டிக்கிறோம்,” என்றும் தெரிவித்தார். இதேவேளை, உறுப்பினர் சுலைமான் ஷாபி கருத்து தெரிவிக்கையில், முன்னர் நடைபெற்ற உப குழு நியமனங்களில் தனக்கு அநீதி செய்யப்பட்டதாக சபையில் விவாதித்திருந்ததாக குறிப்பிட்டார். எனினும், “அந்த சூழ்நிலையிலும் நான் வெளிநடப்பு செய்யவில்லை. மக்களின் பிரதிநிதியாக அவர்களின் உரிமையை பாதிக்கும் வகையில் நடக்கவில்லை,” எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், குறித்த வெளிநடப்பிற்குப் பின்னர் சபை நடவடிக்கைகள் சுமுகமான சூழ்நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.

No comments