Column Left

Vettri

Breaking News

கோட்டமும் வலயமும் கைப்பற்றிய அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை – 73 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு.




கோட்டமும் வலயமும் கைப்பற்றிய அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை – 73 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு. அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் 2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளன. க.பொ.த.உயர்தரபெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து துறைகளிலிருந்தும் 73க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தகுதியைப் பெற்றுள்ளனர். உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதுடன், 05 மாணவர்கள் மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருப்பதென்பது பாடசாலைக்கு பெருமை சேர்ப்பதுடன் வரலாற்று சாதனையாகும். மேலும், வர்த்தகப் பிரிவில் மாணவர்கள் முறையே மாவட்ட மட்டத்தில் 3ஆம் மற்றும் 8ஆம் நிலைகளைப் பெற்றுள்ளனர். கலைதுறை, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இச் சாதனைகளின் அடிப்படையில், திருக்கோவில் கல்வி வலயம் மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தையும், மாவட்ட அடிப்படையில் 1ஆம் இடத்தையும் அடைந்துகொள்ள ஏனைய பாடசாலைகள் போல் கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளது. அதேவேளை, குறித்த பாடசாலை கோட்டத்திலும் வலயத்திலும் முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையானது 75 சதவீதத்திற்கும் அதிகமான சித்தி வீதத்தைப் பதிவு செய்துள்ளதுடன், வலயத்தின் கல்வி முன்னேற்றத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்தச் சாதனை தனிநபர் முயற்சியல்ல மாறாக குழு ரீதியான ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பின் பலனாகும். இச் சாதனையை உருவாக்குவதில் பங்காற்றிய வலயக் கல்வி பணிப்பாளர், பிரதிக் கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பிரதியதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளையும் பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். செல்வி வினாயக மூர்த்தி

No comments

Subscribe Us