Column Left

Vettri

Breaking News

ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவிப்பு !




 ஈஸ்டர் ஞயிறு குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த விசேட அறிவிப்பை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் நீதி, உண்மைகள் வெளிக் கொணரப்பட வேண்டும் என்பதே இந்த பிரார்த்தனை தினத்தின் முக்கிய நோக்கமாகும்.அன்றைய தினம், நாட்டின் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகள் மற்றும் சூத்திரதாரிகள் வெளிச்சத்துக்கு வர இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறும் கத்தோலிக்க மக்களுக்கு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.“உண்மைக்கு நீதி கிடைக்கட்டும்” இதுவே இந்த பிரார்த்தனை தினத்தின் செய்தியாக காணப்படுகின்றது என்றும் கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

No comments