QR முறையினை நடைமுறைப்படுத்துமாறு அரசிடம் பலரும் கோரிக்கை
QR முறையினை நடைமுறைப்படுத்துமாறு அரசிடம் பலரும் கோரிக்கை
வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளாந்தம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் பொதுமக்கள் காத்திருந்து பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருகின்ற எரிபொருள் யாவும் ஒரு சில மணித்தியாலங்களில் தீர்ந்து போவதையும் காண முடிகின்றது.
ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் விற்பனை நிலையத்திலும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் எனும் அச்சத்தில் அதிகளவான வாகன உரிமையாளர்கள் தொடர்ச்சியாக எரிபொருளை பெற்றுவருவதையும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் இரவு பகலாக சேவையினை வழங்கி வருவதையும் உணர முடிகின்றது.
இந்நிலையில் விவசாயிகள் வயலை பண்படுத்தும் வேலைகளுக்கான டீசலை பெற்றுக்கொள்வதற்கு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதையும் அவதானிக்க கிடைத்தது.
எரிபொருளை பதுக்கி வைக்கின்றவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேநேரம் QR முறையினை நடைமுறைப்படுத்துமாறு அரசிடம் பலரும் கோரிக்கையினை முன்னெடுத்து வருவதுடன் அத்தியாவசிய தேவையுடைய அரச உத்தியோகத்தர்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட நடைமுறையொன்றினை மேற்கொள்வதன் மூலம் அரச சேவையினை தடையின்றி முன்கொண்டு செல்ல முடியும் எனவும் அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments