Column Left

Vettri

Breaking News

இன்று அம்பாறையில் மீண்டும் யானைகள் பட்டாளம்




இன்று அம்பாறையில் மீண்டும் யானைகள் பட்டாளம் ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது. இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதான வீதி ஊடாக யானைகள் பட்டாளமாக பயணித்தது. பிரதான வீதியில் பயணித்தவர்கள் சிலமணிநேரம் தாமதித்து பயணிக்க வேண்டி இருந்தது. எதிர்வரும் விதைப்பு காலத்துக்கு முன்பதாக இந்த யானைகளின் அட்டகாசம் மேலும் தொடரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

No comments