Column Left

Vettri

Breaking News

வரிப்பத்தான்சேனையில் “Future Leader Islamic Life Studies” ரமழான் கால பயிற்சி நிறைவு விழா




வரிப்பத்தான்சேனையில் “Future Leader Islamic Life Studies” ரமழான் கால பயிற்சி நிறைவு விழா பாறுக் ஷிஹான்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் சமூக, கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு நேர்வழிகாட்டும் “Future Leader Islamic Life Studies” 7 நாள் பயிற்சி நெறியின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை(13) வரிப்பத்தான்சேனை அல்-அமீன் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் ஆதம்பாவா றப்ஸாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் அக்கறைபற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ், அக்கறைபற்று மாநகர சபை உறுப்பினர் சபூர் ஆதம், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எச். எம். சஜா, முன்னாள் உப தவிசாளர் நெளபர் மௌலவி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எஸ். எ. அன்வர், அல்-அமீன் மகா வித்தியாலய அதிபர் எஸ். எல். கலந்தர்லெப்பை, அஸ்ஸபா வித்தியாலய அதிபர் ஆர். எம். சியாத், அஸ்கர் வித்தியாலய அதிபர் எஸ். கே. எம். அனிஸ், இலுக்குச் சேனை வித்தியாலய அதிபர் யூ. எல். பயாஸ், பாடசாலையின் பகுதி தலைவர் எஸ். எல். சமீம் மௌலவி, ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பயிற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இளைஞர்களை மார்க்க, ஒழுக்க மற்றும் தலைமைத்துவ திறன்களுடன் உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments