Column Left

Vettri

Breaking News

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கிராமசேவகர் பிரிவுக்கு ஒரு வீடு அடிக்கல் நடல்




கிராமசேவகர் பிரிவுக்கு ஒரு வீடு; ஆலையடிவேம்பில் அடிக்கல் நடல் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் (11) நேற்று புதன்கிழமை நடைபெற்றது. ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பரிவுக்கு ஒதுக்கப்பட்ட 22 வீடுகளில் முதல் 03 வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில் நுட்ப அலுவலர் மற்றும் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பிரஜாசக்தி தவிசாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments