Column Left

Vettri

Breaking News

கடந்த அரசாங்கங்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெருந்தொகையான நிதியினை ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு ஒதுக்கியுள்ளது....




கடந்த அரசாங்கங்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெருந்தொகையான நிதியினை ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு ஒதுக்கியுள்ளது.... ஆலையடிவேம்பு நிருபர் வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (11)இடம்பெற்றது.... அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் திரு.திரவியராஜ் அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை. மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஏ. தர்மதாஸ், உதவி பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் முப்படையினர் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள் எனப்பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றனவா? என குறித்த அதிகாரிகளிடம் ஆராயப்பட்டது. மேலும் இப்பிரதேச செயலக பிரிவிலுள்ள குடிநீர் பிரச்சினை, வீதி புனரமைப்பு,யானை வேலி அமைப்பது பற்றி.வீதிகளில் வேகத்தடை தொடர்பாக.கல்வி தொடர்பாக.நெல் உலர வைக்கும் கலைஞர் சாலை தொடர்பாகவும். கலந்துரையாடப்பட்டதுடன் விரைவில் இதற்கான தீர்வுகள் மக்களுக்கு சென்றடைய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது. கடந்த அரசாங்கங்களைவிட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெருந்தொகையான நிதியினை ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு ஒதுக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார். யார் ஊடாக அபிவிருத்தி நடைபெற்றாலும் அது அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாகவே நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Subscribe Us