பொத்துவில் கனகர்கிராம மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்.
பொத்துவில் கனகர்கிராம மக்களின் கவனயீர்ப்பு போராட்டம்.
பொத்துவில் பிரதேசசெயலகத்திட்குட்பட்ட கனகர்கிராம மக்கள் தமது 2ம் கட்ட காணியற்றோருக்கான காணிகளை வழங்கி மீள்குடியேற்றுமாறு கோரியும் ஏற்கனவே மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுத்தரக்கோரியும் பொத்துவில் கனகர்கிராமத்தில் கனகர்கிராமமக்களால் (23)திங்கட்கிழமை கவனயீர்ப்பு. போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
1990ம் ஆண்டு யுத்தம் மற்றும் வன்செயலால் குடிபெயர்ந்த கனகர் கிராம மக்கள் மீண்டும் 2009ம் ஆண்டு குடியேற முற்பட்ட போது வன இலாகாவுக்கு உட்பட்டிருந்ததுடன் மீள்குடியேற்றத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் எழுத்து மூலமாக அரசாங்க தரப்புக்கு கொண்டு சென்றதன் பலனாக 2023 ம் ஆண்டு. முதல்கட்டமாக 73பேருக்கான காணிகள் வழங்கி வைக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டனர்.மீள் குடியேற்றம் இடம்பெற்று 03 வருடங்கள் கடந்த நிலையில் குடியேற்றப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை, என்பதுடன் எஞ்சியோராக கருதப்படும் 125 பேருக்கு மீள்குடியேற்றத்துக்கான நேர்முகப்பரீட்சை கடந்த வருடம் நடைபெற்ற போதிலும். இதுவரை அவர்களுக்கான காணிகள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில். 2023ம் ஆண்டில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறிப்பாக நீர்வசதி,குடிநீர்.மின்சாரம் ,யானைவேலி , பாதைகள் போன்ற அடிப்படை வசதிகள் இதுவரை கிடைக்கப்பெறாத நிலையில் தமது வாழ்வாதாரத்துக்காக பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிப்பதுடன் கனகர்கிராமமக்களின் 02ம் கட்டத்துக்கான காணிகளை துரிதமாக வழங்குமாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பொத்துவில் பிரதேசசெயலாளர் M.A.C அஹமட் நஷீல் அவர்களை சந்தித்து மேற்குறிப்பிட்ட கோரிக்கை அடங்கிய கையெழுத்து மகஜரை கையளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
செல்வி வினாயகமூர்த்தி
No comments