கமு/திகோ/இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தின் புத்தாக்க கண்காட்சி.
கமு/திகோ/இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தின் புத்தாக்க கண்காட்சி.
திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட. அக்கரைப்பற்று திகோ/ இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் இன்று (26) வியாழக்கிழமை மாணவர்களின் புத்தாக்க திறனை வெளிப்படுத்தும் நோக்கில் புத்தாக்க கண்காட்சி 2026 இடம்பெற்றிருந்தது
இலைமறைகாயாக இருக்கின்ற மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நாடாத்தப்பட்ட இந்நிகழ்வில் திருக்கோவில் வலயத்துக்கான விஞ்ஞான பாட ஆலோசகர் திருமதி ஆர்.ஜெயனந்தமூர்த்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.அத்துடன் பாடசாலை அதிபர் திருமதி ரி.குணரத்ன மற்றும் விஞ்ஞானபாட இணைப்பாளர் மற்றும் புத்தாக்க தலைவர் கே.திஷாந்த்,பயிற்றுவிப்பாளர் வி.ரிசாந்த் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் புத்தாக்க கண்காட்சியை கண்டுகளித்ததுடன் அதிதிகளால் மாணவர்களின் புத்தாக்கங்கள் பார்வையிடப்பட்டு புள்ளிகளும் வழங்கப்பட்டது.
செல்வி வினாயக மூர்த்தி
No comments