கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு
கல்முனை வலயக்கல்வி அலுவலக வருடாந்த இப்தார் நிகழ்வு
பாறுக் ஷிஹான்-
கல்முனை வலயக்கல்வி அலுவலக 2026 ஆண்டிற்கான வருடாந்த இப்தார் நிகழ்வும் நல்லிணக்க மார்க்க சொற்பொழிவும் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் கல்விப்பணிமனை மண்டபத்தில் வியாழக்கிழமை(5) நடைபெற்றது.
சமூக நல்லிணக்க இப்தாராக இடம்பெற்ற இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பல்துறை சார் உயரதிகாரிகள் , கல்முனை மாநகர மற்றும் கல்முனை கல்வி மாவட்ட பொறியலாளர்கள், கணக்காளர்கள், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், ஓய்வுபெற்ற வலயக்கல்வி பணிப்பாளர்கள், ஓய்வு பெற்ற பிரதி மற்றும் உதவிக்கல்வி பணிப்பாளர்கள், வலய தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ பாடசாலைகளின் அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு படையினர், கல்முனை பிரதேச செயலக உயர் அதிகாரிகள், மாநகர சபை நிறைவேற்று அதிகாரிகள், வர்த்தக சங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments