Column Left

Vettri

Breaking News

பொத்துவில் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு




பொத்துவில் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் பொத்துவில் பிரதேச விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு (03) பொத்துவில் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி உட்பட கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் எம்.எஸ். றினோஸ் ஆகியோருடன் பிரஜா சக்தியினுடைய பொத்துவில் பிரதேச தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Subscribe Us